காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் அலுவலகங்களை பிரதேச மட்டத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 8 அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட இருப்பதாக அந்த அலுவலகத்தின் தலைவருர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேபோன்ற அலுவலகத்தின் சந்திப்பு எதிர்வரும் 13ம் திகதி திருகோணமலையில் இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக, கருத்துத் தெரிவித்த தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், கடந்த 10 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில், நீதி நிலைநாட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினரிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் 13ம் திகதி திருகோணமலையில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு நேற்று இடம்பெற்றது