சிறுபான்மை இன மாகாணங்களின் அதிகாரங்கள் பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே இருக்கின்றமையானது வெளிப்படையான பேரினவாதமாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை ஆட்சி பிரதேச மக்களின் கைகளில் உள்ளது என்று கூறப்பட்டாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரங்கள் ஆளுநர்களின் கைகளிலேயே உள்ளது.
இதனால் வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களின் அதிகாரத்துக்கான சுதந்திர எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.