நோயாளிக்கு கொடுத்த மருந்தை குடித்த டாக்டர் 9 ஆண்டுகளுக்கு பின் பலி

334 0

201609130955035115_doctor-dead-after-9-years-who-drink-medicine-to-prove-not_secvpfவி‌ஷம் என்று புகார் கூறியதால் நோயாளிக்கு கொடுத்த மருந்தை குடித்த டாக்டர் 9 ஆண்டுகள் கோமாவில் இருந்து மரணம் அடைந்தார்.கோட்டயத்தை அடுத்த மூவாற்றுபுழா பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் டாக்டராக இருந்தவர் பைஜு (வயது 45).
இவரிடம் கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் என்பவர் அவரது நோயாளி மனைவி சாந்தாவை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.சாந்தாவுக்கு வயிற்று வலி என்றும், அதற்கு மருந்து கொடுக்க வேண்டுமென்றும் கூறினார். பைஜுவும் நோயாளியை பரிசோதித்து மருந்து கொடுத்தார்.

அந்த மருந்தை ராஜப்பன் வீட்டிற்கு சென்று மனைவி சாந்தாவுக்கு கொடுத்தார். அதை குடித்ததும், சாந்தா மயங்கி விழுந்தார். உடனே ராஜப்பன் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர் பைஜுவிடம் விவரம் தெரிவித்தார். மருந்து சரியில்லாததால் சாந்தா மயங்கி விழுந்ததாக குற்றம் சாட்டினார்.

ராஜப்பனின் குற்றசாட்டை டாக்டர் பைஜு மறுத்தார். மருந்தில் எந்த குற்றமும் இல்லையென்று கூறினார். அதைநிரூபிக்க தானே அந்த மருந்தை குடிப்பதாக கூறி அவரும், மருந்தை குடித்தார்.

மருந்தை குடித்ததும், பைஜு மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மூவாற்று புழா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பைஜுவை பரிசோதித்த அரசு டாக்டர்கள் அவரது உடலில் வி‌ஷம் கலந்திருப்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து மருந்தில் வி‌ஷம் கலந்து டாக்டரை கொல்ல முயன்றதாக ராஜப்பன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே மருந்து குடித்ததால் மயங்கிய டாக்டர் பைஜு அதில் இருந்து மீள முடியாமல் கோமா நிலைக்கு சென்றார்.கடந்த 2007-ம் ஆண்டு முதல் நேற்று முன்தினம் வரை கோமாவில் இருந்த டாக்டர் பைஜு நேற்று பரிதாபமாக இறந்தார். சுமார் 9 ஆண்டுகள் கோமாவில் இருந்த டாக்டர் பைஜு இறந்தது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.பைஜுவின் மனைவி மற்றும் குழந்தைகள், பைஜுவின் பெற்றோர் கதறி அழுதனர். மருந்தை பரிசோதிக்க முயன்று டாக்டரே பலியான சம்பவம் மூவாற்று புழா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.