டென்னிஸ் பந்துக்குள் போதைப் பொருள் கடத்த மேற்கொண்ட முயற்சியானது தோல்வியடைந்துள்ளது.
நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை டென்னிஸ் பந்துக்குள் சூட்சுமமாக வைத்து களுத்துறை சிறைச்சாலைக்குள் எறிய முற்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபர் கையும்மெய்யுமாக பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
குறித்த பந்திற்குள் 3 கிராம் போதைப்பொருள் இருந்ததாக களுத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டு தற்சமயம் சிறைவாசம் அனுபவித்து வரும் ‘கொன்டே சமிந்தவின்’நண்பர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.