மாதுலுவாவே சோபித்த தேரரின் 75வது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கவோ பதில் வழங்கவோ வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு பதிலளிப்பதை விடுத்து மக்களின் கருத்துக்களை கவனத்திற்கொண்டு செயற்படுவதே ஐக்கிய தேசிய கட்சி அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நேற்றைய உரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் நாட்டுக்கு தெளிவு படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பின்னாசன மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த வேண்டுகோளை அமைதியாக செவிமடுத்த பிரதமர் ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிக்க ஐக்கிய தேசிய கட்சியின் எவரும் முயற்சிக்க என தெரிவித்துள்ளார்.