இலங்கை நாகரீகமான கௌரவமான தேசமாக மகுடம் சூட்டியுள்ளது – சபாநாயகர்

286 0

சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏ தரத்திலான அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இது இலங்கைக்கு நாகரீகமாக கௌரவமான தேசமாக மகுடம் சூட்டியுள்ளது.என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் சமூகம் சம நீதியையும், சமத்துவத்தையும் மதிக்கும் சுதந்திர சமூகமாக திகழ்கிறது என்பது சர்வதேச சமூகத்தில் ஊர்ஜிதமாகியுள்ளது. இது தேசம் என்ற ரீதியில் இலங்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றியென குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏ தரத்திலான அங்கீகாரம் பெற்றமை குறித்து ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை தீபிக்கா உடுகமவும் கருத்து தெரிவித்துள்ளார். ரைட்ஸ்நௌ என்ற மனித உரிமைகள் நிறுவனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பிரபோத ரட்நாயக்க கடந்த காலத்தில் இலங்கை பி தரத்திலான அங்கீகாரத்தையே பெற்றிருந்தது என தெரிவித்துள்ளார்.

Leave a comment