8 வயதுடைய சிறுமி ஒருவரை 65 வயதுடைய முதியவர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை மறைமுகமாக காணொளியில் பதிவு செய்த பிரதேச வர்த்தகர்கள், காணொளியை பொலிஸாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
முறிகண்டி பிள்ளையார் கோவில் அமைந்துள்ள வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் 8 வயதுடைய சிறுமி ஒருவர் 65 வயதுடைய நபர் ஒருவரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த ஏனைய வர்த்தகர்கள், குறித்த வயோதிபர், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்த போது மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் வீடியோ ஆதாரத்துடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த முதியவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வறுமை குடும்பத்தை சேர்ந்தவர் எனவும் வறுமையை சாதகமாக பயன்படுத்தி குறித்த வயோதிப வர்த்தகர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.
இதேவேளை முறிகண்டி பகுதியில் பல சிறுவர்கள் இவ்வாறு வர்த்தக நிலையங்களில் தொழில் செய்து வருவதாகவும் உடனடியாக இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.