சனத் நிஷாந்தவுக்கு பிணை; சகோதரருக்கு பிணையில்லை

285 0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் அவரது சகோதரர் ஒருவரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் மேல் நீதிமன்ம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் கருக்குளிய ஜயதிலகாராம விகாரையில் வைத்து அப்போதைய ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளராக இருந்த தனசேன சுரசிங்க மீது தாக்குதல் நடத்தி கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சந்தேகநபர்களுக்கு எதிராக சிலாபம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a comment