ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (31) காலை இடம்பெறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
விமர்ஷனத்தை உண்டாக்கிய ஜனாதிபதியின் நேற்றைய தின உரை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(30) நடைபெற்ற சோபித்த தேரரின் நினைவு தினக் கூட்டமொன்றில், இந்த அரசாங்கத்தின் கடந்த மூன்றரை வருட ஆட்சிக்காலம் தொடர்பில் கவலையுடன் கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.