நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரும் வரை தாமதித்தமைக்காக ஜனாதிபதியும் பிரதமரும் வெட்கப்பட வேண்டும் என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மறைந்த சோபித்த தேரரின் இறுதிக் கிரியை நிகழ்வின் போது ஆற்றிய உரையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக சபதமிட்ட ஜனாதிபதி, ஒரு வருடத்துக்குப் பின் நடைபெற்ற அவரது நினைவு நிகழ்வில் அது தொடர்பில் ஒரு வார்த்தையையேனும் பேசவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் இல்லை. அவர் அதில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கே எதிர்பார்ப்பதாகவும் அவர் பேராசிரியர் கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்ததன் பின்னர், பிரதமர் மீண்டும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நினைப்பு பிறந்துள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனச்சாட்சியுள்ள ஒரு அரசியல் வாதி இருக்கின்றார் எனின், அவருடைய சரியான அரசியல் போக்கை காட்டுவதற்கு இது சிறந்த தருணம். ஜனாதிபதி முறைமையை நீக்குவதனால், நாடு ஸ்தீரமற்றுச் செல்லும் எனக் கூறும் அரசியல் வாதிகள், எதிர்காலத்தில் ஜனாதிபதிக் கதிரைக்கு ஆசை கொண்டுள்ளவர்கள். நாட்டில் இன்று உண்மையான தேசிய தலைவர்கள் அழிந்து விட்டனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.