100 வேலைத்திட்டம் இந்த அரசாங்கத்தின் மடத்தனமான நடவடிக்கை- சிறிசேன

362 0

தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் செய்யவிருந்த முதலாவது வேலை பாராளுமன்றத்தைக் கலைப்பதாகும் எனவும் பிரதமர் தலைமையிலான 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்ததனால் அந்தப் பணி நடைபெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் முன்னெடுத்த 100 நாள் வேலைத்திட்டம் ஒரு மடத்தனமான  நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் 76 பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியின் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

Leave a comment