பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் நேற்று (29) மாலை விழுந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான சனோஜ் மிஹிரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பம்பரகந்தை பகுதிக்கு சென்று, நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள மண் பாதை ஒன்றில் அதனை நிறுத்திவிட்டு நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியில் தன்னுடைய தொலைபேசி மற்றும் பேர்ஸ் என்பவற்றை வைத்துவிட்டு நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனது பெற்றோர் பிரிந்து மறுமணம் முடித்து வாழ்கின்ற நிலையில், உயிரிழந்த இளைஞன் தனது சசோதர உறவுமுறையான ஒருவருடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.