கன்னடர்கள் வன்முறையை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் 16-ந்திகதி உண்ணாவிரத போராட்டம்

392 0

201609131044469795_vijayakanth-says-dmdk-hunger-strike-on-16th-cauvery-issue_secvpfகர்நாடக மக்களின் தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கும் விதமாக தே.மு.தி.க. சார்பில் வரும் 16-ந்தேதி மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம் தே.மு.தி.க. கோயம்பேடு தலைமை கழக அலுவலகம் முன்பு நடைபெறும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 20 நாட்களுக்கு 12,000 கன அடி தண்ணீர் தினந்தோறும் தந்தே தீர வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சில கன்னட அமைப்பினர் தொடர்ந்து தமிழக மக்களின் ஓட்டல்களையும், சிறு கடைகளையும், 40 லாரிகளையும், பஸ் டெப்போவில் நிறுத்தி வைக்கப்படிருந்த 45 பஸ்களையும் எரித்து தமிழர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளனர்.

அது மட்டும் அல்லாமல் அப்பாவி தமிழ் இளைஞரை கன்னட திரை உலகத்தை சேர்ந்த சிலர் மன்னிப்பு கேட்க சொல்லியும், அடித்தும் துன்புறுத்திய வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி தமிழக மக்களை மிகவும் வேதனைப்பட வைத்துள்ளது. இந்த நிகழ்வுகளை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது.114 வருடங்களாக தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் இடையே நடக்கும் காவிரி நீர் பிரச்சனைக்கு இதுவரை தீர்வே ஏற்படாமல் நீண்ட நெடிய தொடர் நிகழ்வாகவே வருடந்தோரும் அரங்கேறி வருகிறது.

உண்மையில் இந்த தண்ணீர் பிரச்சனைக்கு மாநிலங்களுக்கிடையே நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால் தேசிய நதிகளை இணைப்பதால் மட்டுமே சாத்தியமாகும் என்று தே.மு.தி.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.நம்மைப் பொறுத்தமட்டில் அண்டை மாநிலத்தை சேர்ந்த அனைவரும் சகோதர, சகோதரிகளே நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டும் பொருட்களையும், உடமைகளையும் அழித்தும் வன்முறையை அதிக அளவு நிகழ்த்தும் வரை ஜெயலலிதா அமைதி காத்தது வேதனைக்குரியது.எனவே கர்நாடக மக்களின் இந்த தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கும் விதமாக தே.மு.தி.க. சார்பில் வரும் (வெள்ளிக்கிழமை) 16-ந்தேதி மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம் தே.மு.தி.க. கோயம்பேடு தலைமை கழக அலுவலகம் முன்பு நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.