யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் விநியோக அதிகாரி தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், குற்றவாளிகளை நீதி முன் நிறுத்தக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.