மக்கள் எதிர்பார்த்த ஆட்சி எதிரில் செயற்பாட்டு ரீதியாக நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்ததை தான் ஏற்றுக் கொள்வதாகவும், சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது அரசாங்கம் என்ற வகையில் சில தீர்மானங்கள் எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாகவும், தற்போது தவறுகளை உணர்ந்து எஞ்சியுள்ள இரண்டு வருடங்களில் செயற்படுவதாகவும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மக்கள் நிராகரித்த செல்லாக்காசுகளுக்கு மீண்டுமொரு முறை ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் அந்த கசப்பான கடந்த காலத்தை மறக்க வேண்டாம் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.