தொப்பிக்கல பகுதியில் தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைது

378 0

img_99511தொப்பிக்கல பகுதியை அண்மித்த அரச வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மரக்குற்றிகளை ஏற்றிய வாகனம் புல்லுமலை வட்டார வன இலாகா காரியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்காக கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மரக்குற்றிகள் நரக்கமுல்ல காட்டுப்பகுதி ஊடாக ஏறாவூர் பிரதேச மர ஆலையொன்றுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

6 மற்றும் 12 அடி நீளம் கொண்ட சுமார் 30 மரக்குற்றிகள் இந்த எல்ப் ரக வாகனத்தில் காணப்பட்டன.

இச்சட்டவிரோத நடவடிக்கை நீண்ட நாட்களாக இடம்பெறுவது குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இலுப்படிச்சேனை- நரக்கமுல்ல வீதியில் மாவடியோடைப் பிரதேசத்தில் மறைந்திருந்த வனஇலாக அதிகாரிகள் மரக்குற்றி ஏற்றிவந்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.