ஸ்ரீ ல.சு.க.யின் தீர்மானம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் 3 ஆம் திகதி

307 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கட்சியின் தற்காலிக நிருவாக சபை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்தல் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டணி சேர்ந்துள்ள  அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்பது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள விடயமாகும்.

Leave a comment