கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் இன்று(13) விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில், கூட்டு எதிர்க்கட்சியினரின் எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.