பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டுக்குப் பயங்கரமான பாதிப்புக்கள் உள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கு இருந்த அதிகூடிய அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக குறைக்கப்பட்டுள்ளன.
ஜே.வி.பி. முன்வைத்துள்ள திருத்தச் சட்ட மூலம் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய பாரிய யாப்பு மாற்றமாகும். சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லையென ஜனாதிபதி உறுமொழி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.