நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதற்காக விண்ணப்பிக்கும் தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக சிங்களமொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். அதேபோல் சிங்கள விண்ணப்பதாரர்கள் சிங்கள மொழிக்கு மேலதிகமாக தமிழ் மொழியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
இந்த பதவிக்காக இணைத்துக்கொள்ளப்படுபவர்கள் பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து அரச அலுவலகங்களிலும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.