‘ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் உரிமை மங்களவுக்கு இல்லை’

234 0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இல்லையென, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி விட்டு கட்சித் தாவி பின் மீண்டும் ஐ.தே.கவில் இணைந்துகொண்ட மங்கள சமரவீரவை விட தமக்கு அந்தக் கட்சியில் அதிக உரிமையுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக்க கட்சி சார்பில் களமிறக்கக்கூடிய தகுதியான வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கருத்தை மறுக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் ஒவ்வொறு ஜனாதிபதித் தேர்தலின்போதும், வேட்பாளர் தெரிவில், மங்கள சமரவீரவின் கனிசமான பங்களிப்பை  சுட்டிக்காட்டியுள்ள அரசியல் அவதானிகள், சுஜீவ சேனசிங்கவின் கருத்தை பொருட்படுத்தத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment