நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றார். 2030 ஐ தாண்டியும் ஐ.தே.க.வின் அதிகாரம் தொடருமா என்பதை தீர்மானிக்க வேண்டியது பிரதமர் அல்ல நாட்டு மக்களே ஆவார்கள் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
முறையற்ற நிர்வாகத்தினை மேற்கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பது வேடிக்கையாகவே உள்ளது. நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் மத்தியில் வாக்குளை கேட்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.
19 ஆவது அரசியலமைப்பினை இரத்து செய்து விட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டும் இதுவே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்.