பேஸ்புக் சமூகவலைத்தளம் ஊடாக ஒன்றிணைந்து போதைப் பொருளை பயன்படுத்தி இடம்பெற்ற விருந்துபரசாத்தில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர் யுவதிகள் 62 பேரில் 8 பேர் இன்று அத்தனகல்ல பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஒரு இளைஞர் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு ஏனைய அனைவரும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய வெயாங்கொட காவல்துறையால் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றள்ள நிலையில், இதன்போது பல்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதன்போது அந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த 54 இளைஞர்களும், 8 யுவதிகளும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.