பொலிஸார் ராஜபக்ஷாக்களின் சொத்துக்களையும், வீடுகளையும் சோதனை செய்வதில் அதிகம் ஈடுபட்டுள்ளதனால், பொது மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்ஜய சில்வாவின் தகப்பனது மரண வீட்டில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த அரசாங்கம் வந்ததன் பின்னர், பாதால உலக முக்கியஸ்தர்களின் வீட்டுத் திருமணத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், பொது மக்களுக்கே பாதுகாப்பு இல்லாதிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்