மஹசோன் படை தலைவர் அமித் வீரசிங்க மீது சிறைச்சாலையில் தாக்குதல்

228 0

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் மஹசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்கவின் மீது சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து கடந்த 24 ஆம் திகதி மருந்தகர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமித் வீரசிங்க அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

தனது கணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மருந்து எடுப்பதற்கு சென்ற போது, அங்குள்ள ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது, தனது கணவர் தாக்கப்பட்டுள்ளதாக அமித்தின் மனைவி சித்தும் குமேரி கடந்த 24 ஆம் திகதி அனுராதபுர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment