நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் புதன் கிழமை (30) கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூடி முடிவு செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்த பிரேரணையின் பின்னணி என்ன? இதன் உண்மையான நோக்கம் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதா? அல்லது வேறு நோக்கங்கள் இருக்கின்றதா? என்பது குறித்து விரிவாக ஆராயவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.