பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. மேலும் காபந்து பிரதம மந்திரிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.