ரஷிய ஒலிம்பிக் வீராங்கனைக்கு நாய்க்குட்டியை நேரில் பரிசளித்த ஜப்பான் பிரதமர்

450 0

ரஷியா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அந்நாட்டு ஒலிம்பிக் வீராங்கனைக்கு நாய்க்குட்டியை நேரில் பரிசளித்துள்ளார். 

2018-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென் கொரியாவில் நடைபெற்றது. இதில் ரஷியாவை சேர்ந்த அலினா சகிடோவா(16) என்ற பெண் பனிசறுக்கு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஜப்பானில் பயிற்சி பெற சென்றார். அப்போது ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிடா இன நாய்களால் கவரப்பட்ட அலினா சகிடோவா தான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அந்த நாயை தனக்கு பரிசளிக்க வேண்டும் என அவரது பெற்றோரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், ரஷியாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ள ஜாப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவரது மனைவியுடன் இணைந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மசறு என பெயறிடப்பட்ட மூன்று மாத அகிடா இன நாய்க்குட்டியை அலினா சகிடோவாவிற்கு பரிசளித்துள்ளார்.

Leave a comment