உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டி

742 0

201606250957370801_Muralidhar-rao-says-bjp-alone-contest-for-civic-polls_SECVPFதமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பழனியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பார்வையாளருமான முரளிதரராவ் பேசியதாவது:-பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி புதிய பாதையில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளார்.

மிஸ்டு கால் மூலம் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட போதும் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தோல்வி ஏன் என கேட்கின்றனர். தேர்தலில் சற்று பின்னடைவு அவ்வளவு தானே தவிர பாரதிய ஜனதாவின் ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது. கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகமான ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளோம்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளோம். அதில் மோடி அரசின் நலத்திட்ட உதவிகளை சொல்லி மக்கள் மனதில் கட்சி சின்னத்தை பதிய வைப்போம். லோக் சபா தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்துவதற்காக வரும் ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது.

அவர் மாநில நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற கையாள வேண்டிய யுக்திகள், லோக்சபா தேர்தல் செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment