அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களால் நடாத்தப்படும் முதலாவது பொதுக் கூட்டம் இன்று(26) மாத்தறையில் இடம்பெறுகின்றது.
“மனச்சாட்சியின் சுதந்திரம்” எனும் கருப்பொருளில் நடைபெறும் இன்றைய கூட்டம் மாத்தறை உயன்வத்த மைதானத்தில் இடம்பெறுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக 16 பேரும் இணைந்து தீர்மானித்துள்ளதாக அக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இன்றைய கூட்டத்தில் உரையாற்றுகையில் கூறியுள்ளார்.