சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனிடையே, பியூங்கி என்னும் இடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா கடந்த வெள்ளிக்கிழமை அணு ஆயுத சோதனை நடத்தியது.
இதுவரை நடத்திய அணு ஆயுத சோதனைகளிலேயே இதுதான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று தகவல்கள் வெளியாகியதால், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனைக்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது.
அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததோடு, கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்நிலையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வரும் விவகாரத்தில், பொருளாதார தடை மட்டும் தீர்வு அல்ல என சீனா கருத்து தெரிவித்துள்ளது.