18ஆம் திகதி முதல் மேலும் 3 நாட்களுக்கு கர்நாடகா 12,000 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

353 0

201606080205381468_jayalalithaaincludingof-4-peoplewealthin-the-case_secvpfதமிழ்நாட்டில் டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்காததால் சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசும், விவசாயிகளும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசிடம் பல தடவை கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் தண்ணீர் திறந்துவிட இயலாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உதவியை நாடி 50 டி.எம்.சி. தண்ணீர் கேட்டு மனு செய்தது.

மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “தமிழ்நாட்டுக்கு கர்நாடக அணைகளில் இருந்து 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு காரணமாக பணிந்த கர்நாடக அரசு கடந்த 6ஆம் திகதி முதல் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்புகள், விவசாயிகள் மாண்டிய, மைசூர் மாவட்டங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் அனைத்து கன்னட அமைப்புகளும் ஒன்று சேர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தின.

இதையடுத்து கன்னடர்களை சமரசம் செய்யும் விதமாக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.