கென்யாவின் துறைமுக நகரான மம்பாசாவில் உள்ள மத்திய காவல் நிலையத்தின் மீது, மூன்று பெண்கள் சந்தேகத்திற்குரிய தீவிரவாத தாக்குதலை நடத்தியுள்ளனர்.அந்த பெண்கள் தங்களின் அலைப்பேசி தொலைந்துவிட்டதாக புகார் அளிக்க வந்தனர்; பின்பு அவர்கள் இரண்டு அதிகாரிகளை கத்தியால் குத்தி பெட்ரோல் குண்டுகளை வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்று பேரும் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்; காயமடைந்த இரண்டு போலிஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சமீப காலங்களில் கென்யாவின் கடற்கரை பிராந்தியத்தில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன அதில் பெரும்பாலானவை இஸ்லாமியவாத அமைப்பான அல் ஷபாப்பால் நடத்தப்பட்டது.