உகாண்டாவில் அதிபரின் பசுவை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மத்திய உகாண்டாவில் அதிபர் யோவேரி முசேவேனிக்கு நீண்ட கொம்புகளை கொண்ட பசுமாட்டுப் பண்ணை உள்ளது; இந்த பசுக்கள் அங்கிருந்துதான் திருடப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பசுக்கள் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்; மாடு மேய்ப்பாளர்கள் பாரம்பரியத்திலிருந்து வந்த யோவேரி முசேவேனி, பொதுவாக வெளிநாட்டுப் பிரமுகர்களை தனது பண்ணையில் பசுக்களுக்கு மத்தியில் நடைப்பயிற்சிக்குக் கூட்டிச் செல்வது வழக்கம்.
அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மாடு மேய்ப்பவராக ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்;
முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில், முசேவேனி ஐந்தாவது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.