மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி உயர்வு

347 0

201609120955064832_mettur-dam-water-level-rises-5-feet-in-one-week_secvpfமேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.48 அடியாக உள்ளதால் ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 6-ந் தேதி இரவு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது.
கூடுதலாக திறக்கப்பட்ட இந்த தண்ணீர் 8-ந் தேதி இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. அதன் பின்னர் அணையின் நீர்மட்டம் தினமும் ஒரு அடிக்கு மேல் வேகமாக உயர்ந்து வருகிறது.மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று முன்தினம் 15 ஆயிரத்து 70 கன அடியாக இருந்தது. நேற்று நீர் வரத்து மேலும் அதிகரித்து 16 ஆயிரத்து 53 அடியானது. அணையின் நீர்மட்டம் 79.26 அடியாக உயர்ந்தது.

இன்று நீர்வரத்தில் சற்று சரிவு ஏற்பட்டு 15 ஆயிரத்து 580 கன அடியானது. ஆனால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கு மேல் உயர்ந்து 80.48 அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1250 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட அணைக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகமாக உள்ளதால் அணையினர் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 5-ந் தேதி 75.55 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 80.48 அடியாக உள்ளதால் ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.