சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் இலங்கை விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து இந்த அடிப்படைப் பயிற்சி விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.இலங்கை விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி கடந்த-15 ஆம் திகதி சீனாவின் நான்சாங்கிலுள்ள ஹொங்டு விமானக் கைத்தொழில் மையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த விமானங்களைப் பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த விமானங்கள் விமானப்படை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள நிறத்தைக் கொண்டதாகக் காணப்படுவதுடன் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் தயார் நிலையிலுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.இலங்கை விமானப்படையின் முதலாம் இலக்கப் பயிற்சி அணியில் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதுடன்,சீனக்குடாவிலுள்ள விமானப்படையின் பயிற்சிப் பாடசாலையில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படும் விமானிகளுக்குப் பயிற்சி வழங்குவதாகவும் பயன்படுத்தப்படவுள்ளன.