அறநெறி பாடசாலைகள் நடத்தப்படுகின்ற ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்துமாறு அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஞாயிறு தினங்களில் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் அறநெறி பாடசாலைகளால் அவர்களிடத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய விகாரையின் மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அறநெறி பாடசாலைகளை ஞாயிறு தினங்களில் நடத்துவது தற்போது சவாலான விடயமாக மாறியுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.