தாம் அழகுபடுத்திய கொழும்பு தற்போது அவலட்சணமாக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குருநாகலில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது கொழும்பில் உள்ள அனைத்து மதில்களிலும், பதாதைகள், விளம்பரங்கள் ஒட்டப்பட்டு ,கட்சிகளின் வர்ண தோரணங்கள் தொங்கவிடப்பட்டுள்ளமையானது பார்ப்பதற்கே மிகவும் அருவருப்பாகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அன்று பல வேலைத்திட்டங்கள் சீனாவின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாவும் ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை நிறுத்திவிட்டு இன்று மீண்டும் சீனாவின் பின்னால் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இன்று எவ்வித திட்டமிடலும் இல்லாமல் தற்போதைய ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், அரச அதிகாரிகள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பின்வாங்குவதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.