சட்டவிரோதமான முறையில், தங்கம் கடத்த முயன்ற மூவரை, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
அந்த மூவரிடமிருந்தும் 61 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதானவர் என்றும், மற்றைய இருவரில் ஒருவர் மாத்தறையைச் சேர்ந்தவர் (வயது 55) என்றும், மற்றவர் நபர், மட்டக்களப்பைச் சேர்ந்தவர் (வயது 52) என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மூவரில் ஒருவர், தாய்லாந்து பெங்கொக்கிலிருந்தும், மற்றைய இருவரும் சிங்கபூரிலிருந்தும் தங்கம் கடத்தி வந்தனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அவர்கள் அணிந்திருந்த ஆடைக்குள்ளேயே மறைத்து தங்கத்துண்டுகளைக் கொண்டு வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மூவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 900 கிராம் நிறைகொண்ட தங்கத்துண்டுகளின், இலங்கை பெறுமதி, 61 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயென மதிப்பிடப்பட்டள்ளது என்று சுங்கத்திணைக்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.