தென் மேல் பருவப் பெயர்ச்சி நிலமை காரணமாக நாட்டில் நிலவும் கடும் மழையால் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையப் பணியகம் தெரிவிக்கின்றது. காலி மாவட்டத்தைச் சேர்ந்தோரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்தது.
கடும் மழைக் காரணமாக ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மரமொன்று முறிந்து விழுந்ததன் ஊடாக இன்னுமொருவர் உயிரிழந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மையப் பணியகம் தெரிவித்தது.
பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது. மலையகத்தில் ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 83.9 வீதத்தினாலும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 73.1 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளது. தெதுரு ஓயவைன் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் உடவலவ நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்;பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.