முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதியாக முடியுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஹோமாகம நகரில் மக்கள் சந்திப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பச்சை நிற துமிந்த திஸாநாயக்க மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் செல்வதில் பயனில்லை. அவரால் மீண்டும் நாட்டின் தலைவராக முடியாது.
அவரிடம் நாம் ஒரு விடத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். அரசியலமைப்பை வாசிக்க தெரியாவிட்டால் வாசிக்க தெரிந்த ஒருவரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.அரசியலமைப்பின் 31 , 3 உறுப்புரையின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் மக்களால் மட்டுமே தெரிவு செய்ய முடியாது.
எவ்வாறாயினும் நாட்டின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் பாராளுமன்றமே ஜனாதிபதியை தெரிவு செய்யும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி உள்ளது. இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.