சில ஊடகங்கள் மற்றும் சில அமைப்புக்கள் கூறுவது போன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இன்று (19) இடம்பெற்ற தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
கடந்த 09 ஆண்டுகளாக இந்த நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், எனினும் பலருக்கு பயங்கரவாதிகளையும் இராணுவ வீரர்களையும் பிரித்தறிய தெரியாதிருப்பது குறித்து தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அடிப்படைவாதிகள் வடக்கில் போன்றே தெற்கிலும் இருப்பதாக கூறிய ஜனாதிபதி இவை குறித்து நாம் தௌிவு பெற்று பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்