ராஜித சேனாரத்ன இராணுவம் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காலியிலுள்ள இராணுவர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கவீனமுற்ற இராணுவத்தினர், நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவத்தினரின் மனைவிமார் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அமைச்சரின் கூற்றைக் கண்டித்து பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடைசி யுத்தத்தில் இராணுவம் புலிகளை மாத்திரம் கொலை செய்யவில்லையெனவும், இராணுவத்தினரால் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.