தென் மாகாணத்தில் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தேவையான சுகாதாரக் குழுக்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட உபரணங்கள் தென் மாகாண வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அடையாளம் காணப்படாத நோய் நிலமை காரணமாக சிறு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.
இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று காரணமாக இந்த சிறுவர்கள் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.