விடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது” என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்து தெளிவுப்படுத்துகையில் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தொடர்ந்தும் கூறுகையில்
“வட்டுக்கோட்டை பிரகடணத்துடன் தீவிரமடைந்த பிரிவினைவாதம் தற்போது மீண்டும் நாட்டில் தலைத்தூக்கியுள்ளது. இவை குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளா விடின் ஆபத்து ஏற்படுவதை தடுக்க இயலாது.
மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட போரை 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முடிவிற்கு கொண்டு வந்தோம். பயங்கரவாதத்தை முழுமையாக அழித்த எம்மாள் பிரிவினைவாதத்தை அழிக்க முடியாமல் போனது. இறுதிக்கட்ட போரில் சுமார் 5900 இராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும் 29000 பேர் காயமடைந்ததுடன் 10,000ற்கும் மேற்பட்டோர் கை கால்களை இழந்து அங்கவீனமானார்கள்.
உலக போரில் கூட இவ்வாறானதொரு இழப்பு குறுகிய காலத்திற்குள் இராணுவத்திற்கு ஏற்பட்டதில்லை. அவ்வாறு பல தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றி இன்று சவாலுக்கு உட்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் அப்பாவி மக்களை மீண்டும் தூண்டி விட்டு அழிவுப்பாதையில் பிரிவினைவாத சக்திகள் வழி நடத்துகின்றன.
விடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிட செயற்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கில் தற்போது தீவிர போக்குடன் செயற்படும் அரசியல் சுய நலவாதிகளினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை நினைக்கும் போது கவலையளிக்கின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போரில் உயிரிழந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்களை நினைவுக்கூறும் வகையிலேயே காணப்பட்டது. பிரிவினைவாத அரசியல் சக்திகள் அப்பாவி மக்களை தூண்டிவிடுகின்றனர். இதற்கு மேலும் வலுசேரக்கும் வகையில் தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றது. மேற்குலகத்தின் தேவை பூர்த்தி செய்யும் வகையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மறு புறம் பிரிவினைவத கொள்கைளை கொண்ட புலம்பெயர் தமிழர்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலான சூழலே தற்போது நாட்டில் காணப்படுகின்றது.
எனவே இதனை சிறிய விடயமாக கருத முடியாது இவை குறித்து கவனம் செலுத்தாது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு குறித்து பேசுகின்றது. எனவே நாட்டின் முன் தற்போதுள்ள சவால்களை கருத்தில் கொண்டு செயற்படா விட்டால் மீண்டும் அமைதியற்ற சூழலே நாட்டில் உருவாகும்.” என தெரிவித்தார்