தமிழகத்தில் உள்ள இடங்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிவு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள இடங்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று (சனிக் கிழமை) காலை 11 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றுத்திறன் அல்லாத மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு 23-ந் தேதி வரை நடக்கிறது.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 864 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடு போக கிடைத்துள்ள 117 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு 122 என மொத்தம் 1,103 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 23 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு 96 இடங்களுக்கான கலந்தாய்வு 22-ந் தேதி பகல் 2 மணிக்கு தொடங்கி 23-ந் தேதி முடிவடைகிறது.#tamilnews