தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

465 0

ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்காட்சி 8 வது நாளாக நேற்றைய தினம் காலை Nürnberg நகரத்திலும் மாலை நேரம் Stuttgart நகரத்திலும் மக்கள் நடமாடும் மத்தியில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசால் வரலாற்று ரீதியாகமுன்னெடுக்கப்பட்ட இனவழிப்பை இன்றும் நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டது.

கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டதோடு தேவையான விளக்கங்களையும் மேலதிகமான உரையாடல்களுடன் ஊடாக பெற்றுக்கொண்டனர். இக் கண்காட்சியில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரமும் வேற்றின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இன்றைய தினம் தமிழின அழிப்பு நாள் மே 18 அன்று Düsseldorf மாநகரத்தில் மதியம் 2 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளூராச்சி பாராளுமன்றத்துக்கு முன்பாக வணக்க நிகழ்வுகளும் நடைபெறும்.

 

 

Leave a comment