கடந்த மூன்று தினங்களாக நக்கல்ஸ் மலைப்பகுதியில் பரவிய தீ காரணமாக சுமார் 300 க்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
அதுபோல் வனப்பகுதியின் களுகல – உடஇஹல பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த பைனஸூற்கும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக தீ அதிகளவில் பரவிச்சென்றதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.