அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஜனநாயக கட்சியின் ஹிலரி கிளிண்டன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நிவ்யோர்க் நகரின் உலக வர்த்த மையம் மற்றும் வேஷிங்டனின் பெண்டகன் ஆகியவற்றிட்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 15ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்குக்கொள்ளச் செல்வதற்கு முன்னர், அவர் இதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வில் பங்குக்கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிலரி கிளிண்டன், தாம் தற்போது சிறந்த உடல் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.