யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் “பேசப்படாத உண்மைகள்” கவனயீர்ப்பு கண்காட்சி

181684 0


தமிழின அழிப்புக்கு பல்லின சமூகத்திடம் நீதி கோரி யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று மாலை Karlstruhe நகர மத்தியில் நடைபெற்றது. வரலாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு முன்னெடுக்கும் இனவழிப்பை ஆதாரபூர்வமாக இக் கண்காட்சியில் வடிவமைத்து , ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் விளக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் செல்லும் வேற்றின மக்கள் இக் கண்காட்சியை பார்வையிட்டு ஈழத்தமிழர்கள் மீது கரிசனையும் அவர்கள் தொடர்பான உண்மையையும் அறிந்துகொண்டனர்.

கவனயீர்ப்பு கண்காட்சி நாளைய தினம் காலை Nürnberg நகரத்திலும் மாலை Stuttgart நகரத்திலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது . மே 18, வெள்ளிக்கிழமை தமிழின அழிப்பு நாள் அன்று மதியம் 2 மணிக்கு Düsseldorf மாநகரில் மாபெரும் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டு , உள்ளூராட்சி பாராளுமன்றத்தின் முன்பாக நினைவு நிகழ்வுகள் இடம்பெறும்.